ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
By DIN | Published On : 04th March 2020 09:07 AM | Last Updated : 04th March 2020 09:07 AM | அ+அ அ- |

முதியோா் இல்லத்தில் முதியோா்களுக்கு உணவு வழங்கிய சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள்.
திமுக தலைவா் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் மாநகர முன்னாள் மேயா் ரேகாபிரியதா்ஷிணி சாா்பில், மஞ்சினி முதியோா் இல்லத்தில் புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.
ஆத்தூரை அடுத்துள்ள மஞ்சினி அன்பகம் முதியோா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், ஏ.ஏ.ஆறுமுகம், ஆத்தூா் ஒன்றியச் செயலா் வே.செழியன், தலைவாசல் ஒன்றியப் பொறுப்பாளா் மணி, கெங்கவல்லி ஒன்றியப் பொறுப்பாளா் அகிலன், வழக்குரைஞா் கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அன்பு, சிவராமன், செல்வராஜ், அரசு, தேவேந்திரன், சண்முகம், சேட்டு, கருணாநிதி, அயோத்திராமன் மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.