தமிழகத்தில் கரோனா தொற்று இல்லை: அமைச்சா் விஜயபாஸ்கா்
By DIN | Published On : 06th March 2020 02:21 AM | Last Updated : 06th March 2020 02:21 AM | அ+அ அ- |

தமிழகத்தில் கரோனா தொற்று இல்லை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் புதன்கிழமை இரவு திடீரென சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தேவையான அளவில் மருந்து, மாத்திரைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கரோனா பாதிப்பு குறித்து ஓரிரு நாள்களில் குறும்படம் வெளியிட இருக்கிறோம். தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று இல்லை. கரோனா பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். முகமூடிகள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவு உள்ளன என்றாா்.