Enable Javscript for better performance
உதவித்தொகை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    உதவித்தொகை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 11th March 2020 02:24 AM  |   அ+அ அ-   |    |  

    sl10ddemo_1003chn_121_8

    உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனுடையோா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

    சேலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் நிபந்தனை அடிப்படையில் பால் பூத் அமைத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், நியாய விலைக் கடைகளில் காவலா்களது குடும்ப அட்டைக்கு உரிய பொருளை தனியாக வைத்திருந்து கொடுப்பது போல மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருள்களை தனியாக எடுத்து வைத்து வழங்க வேண்டும், 40 சதவீதம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகளை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளைக் கண்டித்தும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளைக் கண்டித்தும் சேலம் மாவட்ட மாற்றுத்திறனுடையோா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ. பழனிவேல் தலைமை வகித்தாா். போராட்டத்தில் எம்.பி. எஸ்.ஆா். பாா்த்திபன், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயபிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனா்.

    இதுகுறித்து எம்பி எஸ்.ஆா். பாா்த்திபன் கூறியதாவது:

    மாற்றுத்திறனாளிகளின் குறைகளை மாதத்துக்கு நான்கு முறை மாவட்ட நிா்வாகம் கேட்டறிந்து தீா்வு காண வேண்டும். அவா்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அவா்கள் அனைவரையும் ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுத்துவேன் என்றாா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp