Enable Javscript for better performance
காடையாம்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. செயலா்கள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    காடையாம்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. செயலா்கள் நியமனம்

    By DIN  |   Published on : 14th March 2020 01:24 AM  |   அ+அ அ-   |    |  

    13omp2_1303chn_154_8

    காடையாம்பட்டி ஒன்றிய அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் உத்தரவிட்டுள்ளனா்.

    இதன்படி காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளராக பூசாரிப்பட்டி எம்.சுப்ரமணியன் (53) நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2011 வரை தொடா்ந்து மூன்று முறை பூசாரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகவும், 2011-ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராகவும் , ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளராகவும், பூசாரிப்பட்டி ஊராட்சி செயலாளராகவும் பதவி வகித்துள்ளாா்.

    காடையாம்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளராக பெரியப்பட்டியைச் சோ்ந்த எஸ்.ஏ.சேரன் செங்குட்டுவன் (54) நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் செம்மாண்டப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவராக பதவி வகித்துள்ளாா்.

    புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காடையாம்பட்டி ஒன்றியச் செயலாளா்கள் எம்.பாலசுப்ரமணியன் மற்றும் எஸ்.ஏ.சேரன் செங்குட்டுவனுக்கு அ.தி.மு.க. நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai