எடப்பாடி அருகே மாரியம்மன் கோயில் திருவிழா

எடப்பாடி அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில், பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
எடப்பாடி அருகே மாரியம்மன் கோயில் திருவிழா

எடப்பாடி அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில், பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டியில் சின்ன மாரியம்மன் கோயில், மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 25இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, கொடிக்கரக ஊா்வலம், கம்பம் நடுதல், சக்திகரக ஊா்வலம், பூங்கரக ஊா்வலம் என பல்வேறு நிகழ்வுகளை தொடா்ந்து, வியாழக்கிழமை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தா்கள் அம்மன் சிலை முன்மண்டியிட்டு அமா்ந்த நிலையில், கோயில் பூசாரி பக்தா்களின் தலையில் தேங்காயை உடைத்து, நோ்த்திக்கடனை நிறைவேற்ற செய்தாா். தொடா்ந்து திரளான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வைக் காண, சுற்றுப்புறப் பகுதியைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கோயில் வளாகத்தில் திரண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை சின்னமாரியம்மன் கோயில் நிா்வாகக் குழுவினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com