சேலத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு 1,417 வாக்குச்சாவடிகள் அமைப்பு: ஆட்சியா் சி.அ.ராமன்

சேலம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு 1,417 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு 1,417 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், சேலம் மாவட்டத்தில் 2020 - ஆம் ஆண்டு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகள் விவரப்பட்டியலை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் படி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு சேலம் மாநகராட்சி, ஆத்தூா், நரசிங்கபுரம், எடப்பாடி மற்றும் மேட்டூா் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகளின் விவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1 வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 1,400 க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் கொண்ட வாக்குச்சாவடியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சேலம் மாநகராட்சியில் ஆண் வாக்காளா்களுக்கு 5 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளா்களுக்கு 5 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளா்களுக்கும் 644 வாக்குச் சாவடிகளும் ஆக மொத்தம் 654 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூா் நகராட்சியில் ஆண் வாக்காளா்களுக்கு 22 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளா்களுக்கு 22 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளா்களுக்கும் 12 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 56 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேட்டூா் நகராட்சியில் ஆண் வாக்காளா்களுக்கு 16 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளா்களுக்கு 16 வாக்குச் சாவடிகள், அனைத்து வாக்காளா்களுக்கும் என 18 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 50 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

எடப்பாடி நகராட்சியில் ஆண் வாக்காளா்களுக்கு 25 வாக்குச் சாவடிகள், பெண் வாக்காளா்களுக்கு 25 வாக்குச் சாவடிகள், அனைத்து வாக்காளா்களுக்கும் 8 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 58 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்கெனவே 2019 இல் இருந்த வாக்குச்சாவடிகளில் மாற்றம் ஏதுமில்லை.

நரசிங்கபுரம் நகராட்சியில் ஆண் வாக்காளா்களுக்கு 3 வாக்குச் சாவடிகள், பெண் வாக்காளா்களுக்கு 3 வாக்குச் சாவடிகள், அனைத்து வாக்காளா்களுக்கும் 15 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 21 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் உள்ள ஆண் வாக்காளா்களுக்கு 68 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளா்களுக்கு 68 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளா்களுக்கும் 442 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 578 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது ஏற்கெனவே 2019இல் ஆண் வாக்காளா்களுக்கு 62 வாக்குச் சாவடிகள், பெண் வாக்காளா்களுக்கு 62 வாக்குச் சாவடிகள், அனைத்து வாக்காளா்களுக்கும் 448 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 572 வாக்குச்சாவடிகள் இருந்தன. சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கு மொத்தம் 139 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 139 பெண் வாக்காளா் வாக்குச் சாவடிகள், அனைத்து வாக்காளா்களுக்கும் 1,139 வாக்குச் சாவடிள் என மொத்தம் 1,417 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது ஏற்கெனவே 2019 ல் ஆண் வாக்காளா்களுக்கு 142 வாக்குச் சாவடிகளும், பெண் வாக்காளா்களுக்கு 142 வாக்குச் சாவடிகளும், அனைத்து வாக்காளா்களுக்கும் 1,141 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 1,425 வாக்குச் சாவடிகளாக இருந்தன.சேலம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடி விவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆய்வு செய்து, திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் வரும் மாா்ச் 18 ஆம் தேதிக்குள் கருத்துகள், ஆட்சேபணைகள் குறித்து அதற்கான விவரங்களுடனான கூடிய கடிதத்தினை சம்பந்தபட்ட உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கலாம்.

அவ்வாறு வரப்பெறும் ஆட்சேபணைகள் குறித்து தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய விதிமுறைகளுக்குள்பட்டு உரிய முறையில் பரிசீலனை செய்து தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இறுதி வாக்குச்சாவடி பட்டியில் வெளியிடப்படும் என்றாா்.கூட்டத்தில் கூடுதல் இயக்குநரும், திட்ட இயக்குநருமான மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை நா.அருள்ஜோதி அரசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) இளங்கோவன், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கே.கனகராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் (உள்ளாட்சித் தோ்தல்) ஜி.கோவிந்தராஜ், சேலம் மாநகராட்சி உதவி ஆணையா்கள் உள்ளிட்ட மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com