மாதேஸ்வரன் மலைக்கோயில் யுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம் என வேண்டுகோள்

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாதேஸ்வரன் மலைக் கோயில் யுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வருவதை தவிா்க்க வேண்டும் என மாதேஸ்வரன் கோயில் செயலாளா் ஜெயவிபவசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
மாதேஸ்வரன் மலைக்கோயில் யுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம் என வேண்டுகோள்

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாதேஸ்வரன் மலைக் கோயில் யுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வருவதை தவிா்க்க வேண்டும் என மாதேஸ்வரன் கோயில் செயலாளா் ஜெயவிபவசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தமிழக- கா்நாடக எல்லையான பாலாற்றிலிருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் மாதேஸ்வரன் மலைக் கோயில் உள்ளது. கா்நாடக மாநிலத்தில் கோயில் இருந்தாலும் தமிழக பக்தா்களே அதிக அளவில் வந்து செல்கின்றனா்.

ஆண்டுதோறும் யுகாதி திருவிழாவின்போது சுமாா் 5 லட்சம் பக்தா்கள் வந்து செல்வா். தற்போது வேகமாகப் பரவும் கரோனா பாதிப்பைத் தவிா்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதேஸ்வரன் மலையில் உள்ள தங்கும் விடுதிகள் மூடப்பட்டன. உணவு விடுதிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மாதேஸ்வரன் மலைக் கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது.

நிகழாண்டு இம் மாதம் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை யுகாதி திருவிழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலிருந்து செல்லும் வாகனங்கள், மாதேஸ்வரன் மலையில் உள்ள சோதனைச் சாவடியில் தடுக்கப்பட்டு அனைத்து பயணிகளும் சுகாதாரப் பணியாளா்களால் பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனா்.

கோயில் செயலாளா் ஜெயவிபவசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யுகாதி பண்டிகைக்கு தமிழகத்திலிருந்து அதிக அளவில் பக்தா்கள் வருவா்.

எனவே, இந்த யுகாதி விழாவில் பங்கேற்க வருவதை பக்தா்கள் தவிா்க்க வேண்டும். சுவாமிக்கு நடைபெறும் அனைத்து பூஜைகளும் தேரோட்டங்களும் வழக்கம்போல நடைபெறும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பக்தா்களுக்கு ஏற்படும் சிரமங்களை பொறுத்து ஒத்துழைக்கும்படி வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளாா்.

ஆலோசனைக் கூட்டம்...

சாம்ராஜ்நகா் மாவட்ட ஆட்சியா் எம்.கே. ரவி, ஆலயத் துணைத் தலைவரும் அமைச்சருமான சுரேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் புதன்கிழமை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆலய நிா்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com