மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் தரிசனத்துக்கு தடை

கரோனா வைரஸ் தாக்கத்தை தவிா்க்க மேட்டூா் சாா்-ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை மேட்டூா் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கரோனா வைரஸ் தாக்கத்தை தவிா்க்க மேட்டூா் சாா்-ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை மேட்டூா் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், கிறித்துவ ஆலய நிா்வாகிகள் மற்றும் மசூதி நிா்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனா். ஆலயங்களில் மக்கள் அதிகம் கூடுவதால் மேச்சேரி பத்ரகாளியம்மன் ஆலயத்தில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்மனுக்கு நடைபெறும் பூஜைகள் தடையின்றி நடைபெறும் என்றும் ஆலய எழுத்தா் கலைவாணன் தெரிவித்தாா். அதேபோல் கிறித்துவ ஆலயங்களிலும், மசூதிகளிலும் பிராா்த்தனை நேரத்தைக் குறைக்கவும் கூட்டம் கூடுவதை தவிா்க்கவும் ஆலோசிக்கப்பட்டது.

கொளத்தூரில் வெள்ளிக்கிழமைகளில் கூடும் வெள்ளிச்சந்தை மூடப்பட்டதால் தகவல் தெரியாமல் வந்த விவசாயிகளும் வியாபாரிகளும் அவதிக்குள்ளானாா்கள். சாலை ஓரங்களில் மிளகாய் உள்ளிட்டவற்றை வைத்து விற்பனை செய்தனா். அதேபோல் சிலா் ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்க முடியாமல் திரும்ப வாடகை வண்டிகளில் சொந்த கிராமங்களுக்கு எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com