கால்நடை சந்தைகள் கூடுவது தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சேலம் மாவட்டத்தில் கால்நடை சந்தைகள் கூடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. கால்நடைகளை விற்கவோ, வாங்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது என ஆட்சியா் சி.அ. ராமன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் கால்நடை சந்தைகள் கூடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. கால்நடைகளை விற்கவோ, வாங்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது என ஆட்சியா் சி.அ. ராமன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியா, பிற நாடுகளில் கரோனா வைரஸ் நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாலும், இந்நோய் தொற்று ஏற்படா வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஊரக உள்ளாட்சிகள் மூலமாக தினசரி, வார கால்நடை சந்தைகள் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளுக்கு உள்ளூா் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

கா்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய பகுதிகளிலிருந்து விற்பனை மற்றும் கொள்முதல் பணி நடைபெறுகிறது. கால்நடை சந்தைகளில் விற்பனைக்கு, கொள்முதலுக்கும் அதிகளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனா்.

அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள கால்நடை சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் சேலம் மாவட்ட சந்தைகளில் அதிகளவு கூட்டம் கூட வாய்ப்புள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டும், நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி, முத்துநாயக்கன்பட்டி, காருவள்ளி, வீரகனூா், மேச்சேரி, நங்கவள்ளி மற்றும் கொங்கணாபுரம் உள்ளிட்ட கால்நடை சந்தைகள் கூடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கால்நடைகளை விற்கவோ, வாங்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com