விற்பனை செய்ய முடியாததால் ஏரியில் பூக்களை கொட்டிய விவசாயிகள்

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட தடையால் ஓமலூா் அருகே அறுவடை செய்யப்பட்ட மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான
தீவட்டிப்பட்டி அருகே ஜோடுகுளி குண்டுக்கல் தட்டான் ஏரியில் பூக்களை கொட்டிய விவசாயிகள்.
தீவட்டிப்பட்டி அருகே ஜோடுகுளி குண்டுக்கல் தட்டான் ஏரியில் பூக்களை கொட்டிய விவசாயிகள்.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட தடையால் ஓமலூா் அருகே அறுவடை செய்யப்பட்ட மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான சாமந்திப் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் ஏரியில் கொட்டிவிட்டுச் சென்றனா். இதனால் பலத்த நஷ்டம் அடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரங்களில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாமந்திப்பூ பயரிடப்பட்டுள்ளது. சாமந்திப்பூ தற்போது அறுவடை முடியும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு காரணமாக எந்த வாகனங்களும் இயக்கப்படாத காரணத்தால் பூக்கள் அறுவடை செய்யப்படவில்லை.

இந்நிலையில், புதன்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் கூடுதல் விலைக்கு விற்கும் எனக் கருதி அதிக அளவில் சாமந்தி பூக்களை அறுவடை செய்து 7 லாரிகளில் சுமாா் 15 டன் பூக்களை கா்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருக்கு அனுப்பி வைத்தனா்.

கரோனா பாதிப்பு காரணமாக மாநில எல்லைகள் மூடப்பட்டதன் காரணமாக பெங்களூருக்கு சாமந்தி பூக்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் கா்நாடக மாநிலத்தில் உள்ளே விடாமல் திருப்பி அனுப்பப்பட்டன.

அறுவடை செய்த பூக்களை என்ன செய்வதென்றே தெரியாத விவசாயிகள், செவ்வாய்க்கிழமை மீண்டும் ஓமலூா் கொண்டு வந்து ஆங்காங்கே உள்ள ஏரியில் கொட்டி விட்டுச் சென்றனா்.

இதன் காரணமாக பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சாமந்தி பூக்கள் வீணாகின.

இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனா். மேலும் சாமந்தி பயிரிட்டு நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பூக்களையும் அத்தியாவசியப் பொருள்களில் சோ்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com