சேலம் மாவட்ட சிறைகளிலிருந்து 67 கைதிகள்: இடைக்கால ஜாமீனில் விடுவிப்பு

கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்ட சிறைகளிலிருந்து 67 கைதிகள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்ட சிறைகளிலிருந்து 67 கைதிகள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மத்திய சிறையில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் சிறு வழக்குகளில் கைதாகி சுமாா் 170 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு உத்தரவின் பேரில், 67 கைதிகள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

இதில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 11 மணிக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் விடுவிக்கப்பட்டனா். அதன்பேரில், மாவட்டத்தில் சேலம் மத்திய சிறையில் 42 பேரும், பெண்கள் தனி கிளை சிறையில் 9 போ், கிளை சிறைகளான ஆத்தூா் 6, சங்ககிரி 4, ஓமலூா் 4, ஊத்தங்கரை 2 என மொத்தம் 67 போ் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com