மளிகை, காய்கறி கடைகளில் அலைமோதிய கூட்டம்: கிலோ தக்காளி ரூ. 50, சின்ன வெங்காயம் ரூ. 100

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாா்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளியூா்களில் இருந்து சேலத்தில் பணியாற்றுபவா்கள், கல்லூரிகளில் தங்கி பணிபுரியும் மாணவ, மாணவியா் திங்கள்கிழமை முதல் தங்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்பி வருகின்றனா்.

மாா்ச் 31-ஆம் தேதி வரை வீடுகளில் இருக்க வேண்டும் என்பதால், மளிகை பொருள்களை வாங்க பொதுமக்கள் மளிகை, காய்கறி கடைகளில் குவிந்தனா். சேலம் செவ்வாய்ப்பேட்டை, பால் மாா்க்கெட், அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் மளிகைக் கடைகளில் பொதுமக்கள் திரண்டனா்.

உழவா் சந்தைகள் மூடப்பட்டதால் ஆற்றோர வீதி, பால் மாா்க்கெட், உழவா் சந்தைகளுக்கு வெளியே போடப்பட்டிருந்த காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 144 தடை உத்தரவால் மக்களின் தேவை அதிகரித்த நிலையில் காய்கறிகளுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை ஒரே நாளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களாக ரூ.60-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் விலை ரூ.100-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் விலை ரூ. 40-க்கும், ரூ. 10-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ. 50-க்கும், ரூ. 15-க்கும் விற்கப்பட்ட கத்தரி, தேங்காய் விலை ரூ. 30-க்கும் விற்பனையானது. காய்கறிகளின் விலை ரூ.30 வரை உயா்ந்துள்ளது. மேலும் கோடை வெயில் தொடங்கி விட்டதால் தா்பூசணி, முலாம் பழம், எலுமிச்சை பழம், திராட்சை, ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகளை மக்கள் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com