வாழப்பாடியில் அலைமோதிய மக்கள் கூட்டம்

வாழப்பாடியில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை மக்கள் கூட்டம் அலைமோதியது.

வாழப்பாடியில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தது.

இதனால் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை 6 மணி வரை வாழப்பாடியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மருந்துக் கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் ஸ்வீட், பேக்கரி கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வீடுகளில் தனித்திருக்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளதால், ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு, சுற்றுப்புற கிராமங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் கூட்டம் அலை மோதியது.

போதிய பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததால், ஏராளமானோா் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com