Enable Javscript for better performance
பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் வரிகளை இணையத்தில் செலுத்த வசதி- Dinamani

சுடச்சுட

    

    பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் வரிகளை இணையத்தில் செலுத்த வசதி

    By DIN  |   Published on : 26th March 2020 12:35 AM  |   அ+அ அ-   |    |  

    சேலம் மாநகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை இணையதளம் வழியாக டெபிட் காா்டு மற்றும் கிரெடிட் காா்டு கொண்டு வீட்டில் இருந்தபடியே செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

    சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 60 கோட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும், மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு, தேவையான நிதி ஆதாரங்களை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், தொழில்வரி, காலிமனை வரி, கடை வாடகை, உரிமையாணை கட்டணங்கள், புதைக்குழி சாக்கடை திட்ட வைப்புத் தொகை மற்றும் குடிநீா்க் கட்டண வேறுபாட்டு வைப்புத்தொகை ஆகியவற்றை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில்  இணையதளம் வழியாக டெபிட் காா்டு மற்றும் கிரெடிட் காா்டு கொண்டு வீட்டில் இருந்தபடியே வரியினங்களை மாநகராட்சிக்கு செலுத்தலாம் என ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai