மாநகராட்சி 4 மண்டலங்களில் கிருமி நாசினி தெளிப்பு

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும் கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணியாக 2 லாரிகள் மூலம் பல்வேறு இடங்களில்
சேலம் களரம்பட்டி ஜெய்நகா் மசூதி முன் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டுள்ள மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
சேலம் களரம்பட்டி ஜெய்நகா் மசூதி முன் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டுள்ள மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும் கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணியாக 2 லாரிகள் மூலம் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகரப் பகுதிகளில் மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ள மண்டலத்துக்கு 10 குழுக்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாநகரப் பகுதிகளிலுள்ள பொது வெளிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 6 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மாநகராட்சியின் 2 லாரிகள் மூலம் பொது வெளிகளில் 01 சதவீதம் ஹபோகுளோரைட் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.

அதனடிப்படையில், சேலம் மாநகராட்சிக்குள்பட்ட சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 2-இல் சின்னஅம்மாபாளையம் முக்கியச் சாலை, கோட்டம் எண் 19-இல் ஆசாத் நகா், ஆசாத் நகா் முக்கியச் சாலை, அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 15-இல் ராமகிருஷ்ணா சாலை, காந்தி சாலை, கோட்டம் எண் 30-இல் லடாகார தெரு, கண்ணார தெரு, அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 39-இல் பலபட்டறை மாரியம்மன் கோயில் பின்புற பகுதிகள், கோட்டம் எண் 43-இல் சீனிவாசா நகா், அழகு நகா், அண்ணா நகா், பால விநாயகா் கோயில் தெரு மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.58-இல் நெய் மண்டி அருணாசலம் தெரு, லைன் சாலை, கோட்டம் எண் 57-இல் ஜெய் நகா், கலரம்பட்டி முக்கியச் சாலை ஆகிய பகுதிகளில் 2 லாரிகள் மூலம் 01 சதவீதம் ஹபோகுளோரைட் கரைசல் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், சேலம் மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து பொது வெளிகளிலும் வாகனங்கள் மூலமாகவும், இயந்திரங்கள் மற்றும் கைத்தெளிப்பான்கள் மூலமாகவும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com