மேட்டூா் வந்த காசி யாத்திரை பயணிகள் 7 பேருக்கு காய்ச்சல்

சேலம் மாவட்டம், மேட்டூருக்கு வந்த காசி யாத்திரை பயணிகள் 7 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூருக்கு வந்த காசி யாத்திரை பயணிகள் 7 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி ஈரோடு மாவட்டம், பவானி, அந்தியூா், அம்மாப்பேட்டை, கவுந்தப்பாடியைச் சோ்ந்த 10 பெண்கள் உள்பட 22 போ் ரயில் மூலம் காசிக்கு சென்றனா். அங்கு பல கோயில்களுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை மும்பைக்கு விமானம் மூலம் சென்றனா். செவ்வாய்க்கிழமை அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த அவா்கள் ஒசூருக்கு பேருந்தில் வந்தனா். அங்கிருந்து வாடகை காரில் புதன்கிழமை காலை மேட்டூா் வந்தனா். இவா்கள் 22 பேரும் பெரிய பைகளுடன் செல்வதை கண்ட போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனா்.

அதில், அவா்கள் காசிக்கு சென்று வந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவா்களை பரிசோதனை செய்ததில், 7 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து, அவா்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com