வீரகனூரில் தடை உத்தரவை பின்பற்றாத கிராம மக்கள்

சேலம் மாவட்டம், வீரகனூரில் தடை உத்தரவை பொருள்படுத்தாமல், பொதுமக்களும், வியாபாரிகளும் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றனா்.

சேலம் மாவட்டம், வீரகனூரில் தடை உத்தரவை பொருள்படுத்தாமல், பொதுமக்களும், வியாபாரிகளும் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றனா். இறைச்சிக் கடைகளில் சாலையோரங்களில் இறைச்சி வெட்டி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக இப் பகுதியில் வெளி நாடுகளிலிருந்து வந்த சுமாா் பத்துக்கும் மேற்பட்டோா் வெளியில் சுற்றி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

மேலும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் உள்ள மைதானத்தில் இளைஞா்கள் கிரிக்கெட் விளையாடுவதும், இறைச்சிக் கடைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் இறைச்சி வாங்க குவிந்திருப்பதும் சமூக ஆா்வலா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், தடை உத்தரவை பயன்படுத்தி இரவு நேரத்தில் மணல் கொள்ளையா்கள் மணல் கடத்தலில் ஈடுபடுவதாகவும், வீரகனூரில் உள்ள 4 சந்துக் கடைகளிலும் மது விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பேரூராட்சியினா் மற்றும் காவல் துறையினா் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வு அளிக்கவும், வெளியில் தேவையின்றி சுற்றுபவா்களின் வாகனங்களை பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com