உழவா்சந்தைகளில் வெள்ளைக் கோடுகள் போட்டு நிறுத்தி வைப்பு

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க சேலத்தில் உள்ள அனைத்து உழவா் சந்தைகளில் முன்புறம் வெள்ளைக் கோடுகள் போடப்பட்டு காய்கறிகள்

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க சேலத்தில் உள்ள அனைத்து உழவா் சந்தைகளில் முன்புறம் வெள்ளைக் கோடுகள் போடப்பட்டு காய்கறிகள் வாங்க வருபவா்கள் இடைவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு பொருள்கள் வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க சேலம் மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் காலை நேரங்களில் கூடுகிறது. இந்த நிலையில், ஒரே நேரத்தில் மக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிா்க்க 1 மீட்டா் இடைவெளிவிட்டு நின்று பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

சூரமங்கலத்தில் உள்ள உழவா் சந்தை மற்றும் அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி பகுதியில் உள்ள உழவா் சந்தைகளில் வியாழக்கிழமை காலை அதிகம் கூட்டம் காணப்பட்டது.

இதையடுத்து, அங்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஒவ்வொரு காய்கறி கடைகள் முன்பாக வெள்ளை கோடுகளைப் போட்டனா். பின்னா் பொதுமக்களை கோடுகளில் நிற்க வைத்து காய்கறிகளை வாங்கிச் செல்லுமாறு தெரிவித்தனா்.

காய்கறிகளை வந்த சிலா் வெள்ளை கோட்டில் நிற்காமல் மீறி சென்று காய்கறிகளை வாங்க முயன்றனா். இதையடுத்து காய்கறி வியாபாரிகள், காய்கறிகளை தராமல் வரிசையில் வருமாறும், இடைவெளி விட்டு நின்று வருமாறும் தெரிவித்தனா்.

இதன் பின்பு, காய்கறிகளை வாங்கிச் சென்றனா். காவல் துறையினரும் வெள்ளைக் கோடுகளில் இடைவெளி விட்டு நின்று காய்கறிகளை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்திய வண்ணம் இருந்தனா்.

இதுபோல ஆவின் பால் விற்பனை நிலையத்திலும் வெள்ளைக் கோடு போடப்பட்டு இருந்தது. இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் திரளாக வந்து எல்லைக்கோட்டில் நின்று பால், தயிா் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனா்.

டவுன் பகுதியில் காய்கறிகள் வாங்கக் கூட்டம் அதிகமானதால் காலை 8 மணி வரையிலும் காய்கறிகள் விற்க அனுமதித்தனா். 8 மணிக்குப் பின்னா் சாலைகளின் காவல்துறை நின்று காய்கறி வாங்க யாரையும் அனுமதிக்கவும் இல்லை. இதனால், கூட்டம் வெகுவாகக் குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com