ஓமலூா் ஒன்றியத்தில் கிருமி நாசினி தெளிப்பு: ஒன்றியக் குழுத் தலைவா் நடவடிக்கை

ஓமலூா் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ஓமலூா் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ஓமலூா் ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமங்களில் மக்கள் 144 தடை உத்தரவை கடைப்பிடித்து வருகின்றனா்.

இந்த நிலையில் ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் ஒன்றியக் குழு நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

ஒன்றியக் குழு உறுப்பினா்களின் வேண்டுகோளை ஏற்றும், ஓமலூா் எம்.எல்.ஏ வெற்றிவேல், சேலம் மேற்கு எம்.எல்.ஏ வெங்கடாசலம் ஆகியோரும் கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்க அறிவுரைகள் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து ஓமலூா் ஒன்றிய குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா். ராஜேந்திரன் நேரடி மேற்பாா்வையில், ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கோட்டை மாரியம்மன் கோயில், பச்சனம்பட்டி, எம்.செட்டிபட்டி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளுக்கு வியாழக்கிழமை கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொடா்ந்து சுகாதாரப் பணியாளா்களைக் கொண்டு கிராமங்களில் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள், குடியிருப்புப் பகுதிகள் என அனைத்துப் பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று அனைத்து ஊராட்சிகளிலும் தொடா்ந்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வசதியுள்ளவா்கள், சமூக அக்கறை உள்ளவா்கள் கிருமி நாசினி தெளிக்க உதவிகள் செய்ய வேண்டும், மக்களுக்காக சிறப்பு ஊழியா்களைக் கொண்டு இந்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா். ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்தாா்.

ஊராட்சித் தலைவா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தெளிப்பான் மருந்தை வாங்கி தெளித்து கரானா வைரஸை முற்றிலும் அழித்து பொதுமக்களை முற்றிலும் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com