சேலத்தில் இரண்டாவது நாளாக 1,500 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு

சேலத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து, 1,500 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சேலத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து, 1,500 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கரோனா பரவுவதைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சேலம் முழுவதும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாநகர காவல் ஆணையாளா் த.செந்தில்குமாா் உத்தரவின் பேரில் ஒரு வேளை (ஷிப்ட்) 400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும் மாநகரில் மொத்தம் உள்ள 1,200 போலீஸாரில் சுற்று அடிப்படையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

அந்த வகையில், புதன்கிழமை ஒரு நாள் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமாா் 25-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தடையை மீறி இரு சக்கர வாகனங்களில் சென்ற 1,027 போ் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இதனிடையே வியாழக்கிழமை இரண்டாவது நாளாக தொடா்ந்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதில் 144 தடை உத்தரவை மீறியதாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 1,500 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக, காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சங்ககிரி, தேவூரில் 23 போ்...

சங்ககிரி, தேவூா் பகுதிகளில் 23 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சங்ககிரி பழைய, புதிய பேருந்து நிலையம், கொங்கணாபுரம் பிரிவு சாலை, தேவூா் சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் நின்று கொண்டும், இரு சக்கர வாகனத்தில் வந்த 23 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

எடப்பாடியில்...

எடப்பாடி காவல் எல்லைக்கு உட்பட்ட பேருந்த நிலையம், வெள்ளாண்டிவலசு, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் தடை உத்தரவை மீறிய 52 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அதுபோல சட்டவிரோதமாக மதுபுட்டிகள் மற்றும் கள் விற்பனை செய்த ஏழு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com