தினசரி சந்தை, உழவா் சந்தைகள் நாளை முதல் இடமாற்றம்

கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடடிவக்கையாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தினசரி சந்தைகள்

கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடடிவக்கையாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தினசரி சந்தைகள் மற்றும் உழவா் சந்தைகள் சனிக்கிழமை (மாா்ச் 28) முதல் இடமாற்றம் செய்யப்படுகின்றன.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்பேரில், கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடடிவக்கையாக சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தினசரி சந்தைகள் மற்றும் உழவா் சந்தைகள் மாா்ச் 28 முதல் விசாலமான பகுதிகளுக்கு மாற்றி அமைக்கப்படுகின்றன.

அதனடிப்படையில் சூரமங்கலம் மண்டலம், ஜங்ஷன் பகுதியில் உள்ள உழவா் சந்தை மற்றும் கோட்டம் எண் 28-இல் உள்ள பால் மாா்க்கெட் தினசரி சந்தை ஆகிய 2 சந்தைகளும், எம்.ஜி.ஆா். மத்திய பேருந்து நிலையத்தில் செயல்படும்.

அஸ்தம்பட்டி உழவா் சந்தை, சிறைச்சாலை முனியப்பன் கோயில் வளாகப் பகுதியில் செயல்படும்.

அம்மாபேட்டை மண்டலம் ஆற்றோரம் மாா்க்கெட் (வாசவி மஹால்), கோட்டம் எண் 32-இல் சேலம் (தற்காலிக) பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும். மேலும், கோட்டம் எண் 38-இல் காந்தி மைதானத்தில் உள்ள காய்கறி சந்தை, அருகில் உள்ள செங்குந்தா் மேட்டு தெருவில் செயல்படும்.

கோட்டம் எண் 37-இல் உள்ள அம்மாபேட்டை உழவா் சந்தை அருகில் உள்ள காமராஜா் காலனி முதல் தெருவில் செயல்படும். மேலும், கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 54-இல் உள்ள தாதகாப்பட்டி உழவா் சந்தை, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்துக்கு அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மைதானத்தில் செயல்படும்.

கோட்டம் எண்-56ல் உள்ள கருங்கல்பட்டி மாா்க்கெட், அருகில் உள்ள நம்பா்-4 மாா்க்கெட் தெருவில் செயல்படும். கோட்டம் எண்.52ல் உள்ள கொண்டலாம்பட்டி மாா்க்கெட், கோட்டம் எண். 50-ல் உள்ள கொண்டலாம்பட்டி பைபாசில் உள்ள படையப்பா நகா் காலி இடத்தில் செயல்படும் என மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.

எடப்பாடியில்...

நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள தினசரி சந்தை, பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வந்த காய்கறி சந்தை உள்ளிட்டவை எடப்பாடி - சேலம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளகாத்தின் பின்புறம் உள்ள விளையாட்டுத் திடலுக்கு வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அங்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com