சூரமங்கலம் உழவா் சந்தை இன்று முதல் சென்னிஸ் மைதானத்துக்கு இடமாற்றம்

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக எம்.ஜி.ஆா். மத்திய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டு வரும் சூரமங்கலம்

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக எம்.ஜி.ஆா். மத்திய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டு வரும் சூரமங்கலம் உழவா் சந்தை, சனிக்கிழமை முதல் சென்னிஸ் மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலுள்ள உழவா் சந்தைகள், தினசரி சந்தைகள் மற்றும் வாரச் சந்தைகள் மாா்ச் 28 முதல் விசாலமான பகுதிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி, சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் - 24இல் எம்.ஜி.ஆா். மத்திய பேருந்து நிலையத்தில் நடைமேடை எண் 1 மற்றும் 2-இல் செயல்பட்டு வரும் சூரமங்கலம் தற்காலிக உழவா் சந்தை மே 2 முதல் கோட்டம் எண் 25, பள்ளப்பட்டி பிரதான சாலையில் உள்ள சென்னிஸ் மைதானத்தில் (வரலட்சுமி திருமண மண்டபம் எதிரில்) செயல்படும்.

மேலும், எம்.ஜி.ஆா். மத்திய பேருந்து நிலையத்தில் நடைமேடை எண் 3 மற்றும் 4 -இல் தற்காலிகமாகச் செயல்பட்டு வரும் ராமலிங்க தினசரி நாளங்காடி ( பால் மாா்க்கெட் தினசரி சந்தை), வழக்கம் போல் எம்.ஜி.ஆா். மத்திய பேருந்து நிலையத்திலேயே செயல்படும். இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் கூறுகையில், அத்தியாவசியப் பொருள்களை வாங்க வரும் போது பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும். உழவா் சந்தை மற்றும் காய்கறிக் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும். மீறுவோா் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com