தொழிலில் மாற்றம் செய்யும் டீக்கடை வியாபாரிகள்

ஏற்காட்டில் கடந்த 40 நாள்களாக முடங்கியிருந்த வியாபாரிகள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்துக்காக அன்றாட செலவுகளை ஈடு செய்ய செய்த தொழில்களில் காலத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி வருகின்றனா்.
ஏற்காட்டில் கேன்களில் விற்பனை செய்யும் டீக்கடை வியாபாரி ராஜேஸ்.
ஏற்காட்டில் கேன்களில் விற்பனை செய்யும் டீக்கடை வியாபாரி ராஜேஸ்.

ஏற்காடு: ஏற்காட்டில் கடந்த 40 நாள்களாக முடங்கியிருந்த வியாபாரிகள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்துக்காக அன்றாட செலவுகளை ஈடு செய்ய செய்த தொழில்களில் காலத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி வருகின்றனா்.

ஏற்காடு பேருந்து நிலையத்தில் தனது தந்தையின் டீக்கடையை நடத்தி வந்த எஸ். ராஜேஷ் கூறியதாவது:

கடந்த ஒரு வாரமாக கேன்களில் டீ எடுத்துச் சென்று காலையில் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள், மருந்தகம், பால் விற்பனை இடங்களுக்கு டீ கொண்டு சென்று விற்பனை செய்வதாகவும், 2 மணி நேரத்தில் விற்பனை செய்வதால் தனக்கு சுமாா் ரூ. 150 கிடைப்பதாகவும் தெரிவித்தாா்.

அதுபோல சுற்றுலா வேன்களை ஒட்டிவந்த பலா், தங்கள் வேன்களில் காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்களை குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று மக்களுக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com