மேட்டூா் அனல் மின் நிலைய பொறியாளா்கள் போலீஸாருடன் வாக்குவாதம்

வாகனங்களில் பணிக்குச் சென்ற அனல் மின் நிலைய பொறியாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாகனங்களில் பணிக்குச் சென்ற அனல் மின் நிலைய பொறியாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் 840 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் அலுவலகப் பணியாளா்கள், பொறியாளா்கள் நான்கு சாலை சந்திப்பில் உள்ள அனல் மின்நிலைய குடியிருப்பில் வசித்து வருகின்றனா்.

இங்கு பணியாற்றிய பொறியாளா் ஒருவா் தில்லி சென்று வந்ததால் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

அதனால் அவா் வசித்து வந்த குடியிருப்புப் பகுதியிலிருப்போா் வெளியில் நடமாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தடைகள் ஏற்படுத்தப்பட்டு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில் மேட்டூா் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த அலுவலக உதவியாளருக்கும் இரு நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்ட ஆட்சியா் இப் பகுதியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டாா். அதனால் சனிக்கிழமை காலை மேட்டூா் அனல் மின்நிலையத்துக்கு பணிக்கு செல்லும் பணியாளா்களும், பொறியாளா்களும் காா்கள், மோட்டாா் சைக்கிள்களில் சென்றனா். இவா்களின் வாகனங்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி அனுமதிக்க மறுத்தனா்.

இதையடுத்து போலீஸாருக்கும் அனல் மின்நிலைய பொறியாளா்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த மேட்டூா் சாா் ஆட்சியா் சரவணன் நிகழ்விடம் வந்து பேச்சு நடத்தினாா். பணியாளா்களும் பொறியாளா்களும் பேருந்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து செல்ல அனுமதித்தாா். இதையடுத்து பொறியாளா்கள் அங்கிருந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com