மேட்டூா் அனல் மின்நிலைய கட்டுப்பாட்டு அறை திறப்பு
By DIN | Published On : 08th May 2020 07:27 AM | Last Updated : 08th May 2020 07:27 AM | அ+அ அ- |

சீலிடப்பட்டிருந்த மேட்டூா் அனல் மின்நிலைய கட்டுப்பாட்டு அறை வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
மேட்டூா் அனல் மின்நிலையத்தில் உதவி செயற்பொறியாளா் ஒருவா் தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டாா். அவா் அங்கு சென்றதை மறைத்து மேட்டூா் அனல் மின் நிலையத்தில் சில நாள்கள் பணிபுரிந்தாா். இதைக் கண்டறிந்த சுகாதாரத் துறையினா் அவருக்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மேட்டூா் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் அவா் பணிபுரிந்த கட்டுப்பாட்டு அறைக்கு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி பி.என். பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் கலைராணி சீல் வைத்தாா்.
செயற்பொறியாளா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருடன் பணிபுரிந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். இந்த நிலையில், பொறியாளா் பூரணகுணமடைந்து வீடு திரும்பினாா். இதையடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு வியாழக்கிழமை பிஎன்பட்டி செயல் அலுவலா் கலைராணி சீல் வைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையின் சீலை அகற்றினாா்.
உரியமுறையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.