முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேட்டூா் அணை நீா் திறப்பு அதிகரிப்பு
By DIN | Published On : 11th May 2020 07:58 PM | Last Updated : 11th May 2020 07:58 PM | அ+அ அ- |

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டதும், குடிநீா்த் தேவைகளுக்காக அணையிலிருந்து தண்ணீா் திறப்பது வழக்கம்.
கடந்த ஜனவரி 28-ஆம் தேதி அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு குடிநீா் தேவைகளுக்காக மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.
அதிகபட்சமாக நொடிக்கு 2,000 கனஅடி வரை குடிநீருக்குத் திறப்பது வழக்கம். தேவைக்கு ஏற்ப நீா் திறப்பு அதிகரித்தும் குறைத்தும் திறக்கப்படும். இம் மாதம் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1,000 கனஅடியிலிருந்து 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
தற்போது குடிநீா் தேவைக்காக கூடுதல் தண்ணீா் தேவைபட்டதால் திங்கள்கிழமை பகல் 2 மணிக்கு குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியிலிருந்து 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100. 17 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 686 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 65. 06 டி.எம்.சி.யாக இருந்தது.