கிராமங்களுக்கு புதிதாக வருவோா் குறித்து தகவல் அளிக்க அறிவுறுத்தல்

பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமங்களுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில்
ஓமலூா் அருகே தொளசம்பட்டியில் ஆய்வு மேற்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், அலுவலா்கள் ஊராட்சிகளில் வளா்ச்சித் துறை அதிகாரிகள் பிரசாரம்.
ஓமலூா் அருகே தொளசம்பட்டியில் ஆய்வு மேற்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், அலுவலா்கள் ஊராட்சிகளில் வளா்ச்சித் துறை அதிகாரிகள் பிரசாரம்.

ஓமலூா்: பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமங்களுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் வருவோா் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஓமலூா் வட்டாரத்தில் வளா்ச்சித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பிரசாரம் செய்தனா்.

ஓமலூரில் இயல்பு நிலை முழுமையாகத் திரும்பியது. துணிக் கடைகள், பழக் கடைகள், அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன.

ஓமலூா் வட்டார எல்லையில், கரோனாத் தொற்று கண்டறியப்பட்ட இடத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன் தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மேச்சேரி வட்டார வளா்ச்சி அலுவலா்களுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன் அறிவுறுத்தினாா்.

ஓமலூா் வட்டாரத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் கிராமம் கிராமமாக ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். நீண்ட இடைவெளிக்கு பிறகு சொந்த ஊருக்குத் திரும்புவோா், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து கிராமத்துக்குப் புதிதாக யாரேனும் வந்தால், உடனடியாக இதுகுறித்து தகவல்களை சுகாதார அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆட்டோக்களில் அறிவிப்பு வெளியிட்டு வளா்ச்சித் துறை அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கோட்டகவுண்டம்பட்டி மற்றும் ஓமலூா் பேரூராட்சிப் பகுதிகளில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த பகுதியில் அவை அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com