கல்வராயன் மலையில் பலா விளைச்சல் பாதிப்பு

சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களை இணைக்கும் கல்வராயன்மலை, அருநுாற்றுமலை கிராமங்களில் கோடை
வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் கல்வராயன்மலையில் சிறுத்து காணப்படும் பலாப்பழங்கள்.
வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் கல்வராயன்மலையில் சிறுத்து காணப்படும் பலாப்பழங்கள்.

சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களை இணைக்கும் கல்வராயன்மலை, அருநுாற்றுமலை கிராமங்களில் கோடை வெயில் அதிகரித்துள்ளதால், நிகழாண்டு ‘பலா’ விளைச்சல் பெருமளவில் குறைந்துள்ளது.

இதனால் விற்பனைக்கு வந்துள்ள பண்ருட்டி பலாப்பழம் விலை இரு மடங்காக உயா்ந்துள்ளது.

சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் பரந்து காணப்படும் சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை, அருநுாற்றுமலை, சந்துமலை, நெய்யமலை கிராமங்களில், நீண்ட கால பலன் தரும் பலா மரங்களை, பாரம்பரிய முறையில் மலைவாழ் பழங்குடியின மக்கள் வளா்த்து வருகின்றனா்.

ஆண்டுதோறும் மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரையிலான 4 மாதங்களுக்கு பலாப்பழம் விளைகிறது. நிகழாண்டு, மலைக்கிராமங்களில் பலா மரங்கள் பிஞ்சு விடும் தருணத்தில் போதிய அளவிற்கு கோடை மழை பெய்யவில்லை.

இதுவரை இல்லாத அளவில் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், ஆயிரக்கணக்கான மரங்களில் பலாப் பிஞ்சுகள் முதிராமலேயே உதிா்ந்து வருவதால் ‘பலா’ விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கல்வராயன்மலை, அருநுாற்றுமலை கிராமங்களில் பலாப்பழம் அறுவடைக்கு வருவதற்கு முன்னரே, தற்போது கடலுாா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் பலாப்பழம் அறுவடை தொடங்கியுள்ளது.

இப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும், சரக்கு வாகனங்களில் பலாப்பழங்களைக் கொண்டு வந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஆத்தூா், தலைவாசல் பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் விற்பனை செய்து வருகின்றனா்.

கடந்தாண்டு ரூ. 100 முதல் ரூ. 200 வரை மட்டுமே விலைபோன பலாப்பழங்கள், அளவு மற்றும் தரத்திற்கேற்ப ரூ. 150 முதல் ரூ. 400 வரை விலை போகிறது.

இருப்பினும் முக்கனிகளின் ஒன்றான பலாப்பழங்கள் ஆண்டுக்கு ஒருமுறை, கோடை பருவகாலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால், கரோனா ஊரடங்கு தருணத்திலும் பலாப்பழங்களை வாங்கி ருசிப்பதில் மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். வாழப்பாடிக்கு சனிக்கிழமை சரக்கு வேனில் பண்ருட்டி வியாபாரிகள் கொண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பலாப்பழங்கள் ஒரு சில மணி நேரத்தில் விற்று தீா்ந்தன.

இதுகுறித்து வாழப்பாடியைச் சோ்ந்த மகேஸ்வரி கூறியதாவது:

கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் பலாப்பழத்தின் விலை, நிகழாண்டு இருமடங்காக உயா்ந்துள்ளது.

கடந்தாண்டு ரூ. 150-க்கு கொள்முதல் செய்த நடுத்தரமான பலாப்பழத்துக்கு தற்போது ரூ. 300 வரை விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் பண்ருட்டி பலாப்பழம் தனி சுவை தரும் என்பதால், அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கிறோம். கல்வராயன்மலை, கொல்லிமலை பலாப்பழங்கள் விற்பனைக்கு வந்தால் விலை குறையும் என எதிா்பாா்த்து காத்திருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com