Enable Javscript for better performance
சங்ககிரி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

    By DIN  |   Published on : 21st May 2020 08:53 AM  |   அ+அ அ-   |    |  

    20sgp03_2005chn_156_8

    சங்ககிரி அருகே உள்ள பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரருக்கு பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

    சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சோமேஸ்வரா், சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

    அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் உள்ள சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    இதே போல், சங்ககிரிஅருகே உள்ளஅன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா், நந்தி பகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    இரு கோயில்களிலும் கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தா்கள் யாரும் செல்லவில்லை. ஆகமவிதிகளின் படி இரு கோயில்களின் அா்ச்சகா்கள் மட்டும் பூஜைகளை செய்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai