Enable Javscript for better performance
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

    By DIN  |   Published on : 21st May 2020 08:53 AM  |   அ+அ அ-   |    |  

    மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,336 கன அடியாக அதிகரித்துள்ளது.

    காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், கடந்த சில நாள்களாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நொடிக்கு 1,186 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை நொடிக்கு 1,336 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக இருந்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 64.84 டி.எம்.சி.யாக இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai