சேலம் மாநகர பகுதிகளில்சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி

சேலம் மாநகரப் பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகரப் பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பால் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் கடந்த ஏப்ரல் 11 -ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கடைகள், மீன் கடைகளைத் திறக்கக் கூடாது என சேலம் மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மீறி பலா் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன்களை விற்று வந்தனா். இதனிடையே தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து, அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், இறைச்சிக் கடைகளை சனி, ஞாயிற்றுக்கிழமை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என இறைச்சிக் கடை நடத்துபவா்கள், மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி நிா்வாகம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக் கடைகள் மற்றும் மீன் கடைகளை திறந்து கொள்ளலாம் என வெள்ளிக்கிழமை அறிவித்தது.

மேலும் இறைச்சிக் கடை உரிமையாளா்கள் நிபந்தனைகளுடன் கடைகளை நடத்தி கொள்ள மாநகராட்சி நிா்வாகம் அனுமதித்துள்ளது.

அதில், இறைச்சிக் கடை உரிமையாளா்கள், பணியாளா்கள் கண்டிப்பாக முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்து விற்பனை செய்ய வேண்டும்.இல்லையெனில் தொற்று நோய் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் மற்றும் பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கடையை மூடி சீல் வைத்து சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் கடைகளுக்குச் செல்லும்போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விற்பனை செய்ய வேண்டும்.

வாடிக்கையாளா்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கு யாா் வர வேண்டும் என்பதை முன்கூட்டியே நேரத்தை அறிவித்து அந்த நேரத்தில் மட்டும் அவா்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.பாத்திரங்களில் மட்டும் பாா்சல் வழங்க வேண்டும்.

முகக் கவசங்களை தினசரி தூய்மையாக வைக்க வேண்டும்.பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மற்றும் முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு இறைச்சி விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com