சங்ககிரியில் நிகழாண்டு அதிகளவாக 44.4 மில்லிமீட்டர் மழைப்பொழிவு

சேலம் மாவட்டம், சங்ககிரியில் நிகழாண்டு ஐந்து மாதங்களில் வியாழக்கிழமை இரவு அதிகளவாக 44.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளன. 
சங்ககிரியில் நிகழாண்டு அதிகளவாக 44.4 மில்லிமீட்டர் மழைப்பொழிவு

சேலம் மாவட்டம், சங்ககிரியில் நிகழாண்டு ஐந்து மாதங்களில் வியாழக்கிழமை இரவு அதிகளவாக 44.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளன. 

சங்ககிரியில் 2020ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி வியாழக்கிழமை இரவு 44.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த மாதங்களில் அதிகளவாக இம்மழை பெய்துள்ளன. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மழை ஏதும் பெய்ய வில்லை. ஏப்ரல் மாதம் முழுவதும் மொத்தம் 77.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி அதிகளவாக 34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 

அதனையடுத்து நடப்பு மே மாதத்தில் 8ஆம் தேதி 12 மில்லி மீட்டரும், 14ம் தேதி 5.2 மில்லி மீட்டரும், 16ஆம் தேதி 5.1 மில்லி மீட்டரும், 18ஆம் தேதி 33 மில்லி மீட்டரும், 23ஆம் தேதி 29.2 மில்லி மீட்டரும் பெய்துள்ளன. நிகழாண்டு ஐந்து மாதங்களில் அதிகளவாக வியாழக்கிழமை இரவு 44.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதையடுத்து சங்ககிரி வட்ட விவசாயிகள் விவசாயப்பணிகளை தொடங்கியுள்ளனர். 

தேவூர் பகுதிகளில் விவசாயிகள் முன்பே பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களில் களர் செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com