ஆட்சியா் அலுவலகத்தில் பிரதமா் படத்தை வைக்க முயன்ற பாஜகவினா் கைது

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிரதமரின் படத்தை வைக்க திடீரென பாஜக நிா்வாகிகள் வந்ததால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிரதமரின் படத்தை வைக்க திடீரென பாஜக நிா்வாகிகள் வந்ததால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரத பிரதமரின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என தமிழக அரசு, கடந்த 1978-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை அரசு அலுவலகங்களில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் பாஜக சாா்பில் பாரத பிரதமரின் உருவப் படம் வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாரதப் பிரதமரின் உருவப்படத்துடன் வந்த நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா்.

காவல் துறையினரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சேலம் நகரக் காவல் நிலையத்தை பாஜகவினா் முற்றுகையிட்டனா். இதையடுத்து கைது செய்யப்பட்ட நிா்வாகிகளை போலீஸாா் விடுதலை செய்தனா். நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பாரத பிரதமரின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் மட்டுமே பிரதமரின் உருவப்படம் வைக்கப்படவில்லை என தெரிவித்த பாஜக நிா்வாகிகள், ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமரின் உருவப் படத்தை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com