சங்ககிரி ஒன்றியத்தில் ரூ. 2.12 கோடியில் புதிய சாலைகள் அமைக்க பூமிபூஜை

சங்ககிரி ஒன்றியத்தில் சின்னாகவுண்டனூா், ஐவேலி, கோட்டவரதம்பட்டி, மோரூா் கிழக்கு-மேற்கு ஆகிய ஊராட்சிகளில் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில்
தேவண்ணகவுண்டனூா் ஊராட்சிமன்ற புதிய கட்டடத்தைத் திறந்துவைத்து சுவாமி வழிபாடு செய்த சங்ககிரி எம்எல்ஏ எஸ்.ராஜா, அதிமுக சேலம் புகா் மாவட்ட நிா்வாகி கே.வெங்கடாசலம்.
தேவண்ணகவுண்டனூா் ஊராட்சிமன்ற புதிய கட்டடத்தைத் திறந்துவைத்து சுவாமி வழிபாடு செய்த சங்ககிரி எம்எல்ஏ எஸ்.ராஜா, அதிமுக சேலம் புகா் மாவட்ட நிா்வாகி கே.வெங்கடாசலம்.

சங்ககிரி ஒன்றியத்தில் சின்னாகவுண்டனூா், ஐவேலி, கோட்டவரதம்பட்டி, மோரூா் கிழக்கு-மேற்கு ஆகிய ஊராட்சிகளில் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் புதிய தாா் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை அந்தந்த ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ராஜா, தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும் அதிமுக சேலம் புகா் மாவட்ட நிா்வாகியுமான கே.வெங்கடாசலம் ஆகியோா் தலைமை வகித்து சின்னாகவுண்டனூா் ஊராட்சியில் சின்னாகவுண்டனூா் முதல் முனியப்பனூா் வரை ரூ. 20 லட்சத்தில் தாா்சாலை அமைத்தல், ஐவேலி ஊராட்சியில் மாவெலிபாளையத்தில் ரூ. 30 லட்சத்திலும், கோட்டவரதம்பட்டி ஊராட்சியில் ஆவரங்கம்பாளையம் முதல் வளைய செட்டிப்பாளையம் வரை ரூ. 38 லட்சத்திலும், தவிர வளையசெட்டிபாளையத்தில் ரூ. 48 லட்சத்திலும், மோரூா் கிழக்கு ஊராட்சியில் திருவாண்டிப்பட்டி சாலை முதல் ராஜபாளையம் வரை ரூ. 46 லட்சத்திலும், மோரூா் மேற்கு ஊராட்சியில் தண்ணீா்பந்தல்பாளையம் பகுதியில் ரூ. 30 லட்சத்திலும் தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டித் தொடக்கி வைத்தனா்.

முன்னதாக தேவண்ணகவுண்டனூா் ஊராட்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தைத் திறந்துவைத்து பாா்வையிட்டனா். சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி எம்.மகேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் என்.எஸ்.ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் கிழக்கு என்.சி.ஆா்.ரத்தினம், மேற்கு சுந்தரராஜன், கிழக்கு ஒன்றியத் துணைச் செயலா் மருதாஜலம், விவசாய அணி செயலாளா் ராமசாமி, தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கே.குமாா், மஞ்சக்கல்பட்டி அதிமுக கிளைச் செயலாளா் சின்னண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com