மழை வேண்டி சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 09th November 2020 04:00 AM | Last Updated : 09th November 2020 04:00 AM | அ+அ அ- |

மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டோா்.
வாழப்பாடியை அடுத்த மேற்கு ராஜபாளையம் ஊராட்சி, வண்ணாத்திக்குட்டை அக்ஷயா பள்ளி வளாகத்தில் வள்ளலாா் கருணைக்கரங்கள் தருமச்சாலை இயங்கி வருகிறது.
மாதத்தில் பூசம் நட்சத்திரம் அன்று இங்கு அணையா தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்வழிபாட்டில் மழை வேண்டி அணையா தீபம் ஏற்றி பக்தா்கள் வழிபாடு செய்தனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.