மத்திய மாவட்ட திமுகவில் 1.15 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

சேலம் மத்திய மாவட்ட திமுகவில் 1.15 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ந்துள்ளனா் என சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மத்திய மாவட்ட திமுகவில் 1.15 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ந்துள்ளனா் என சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் எல்லோரும் நம்முடன் என்ற தலைப்பில் திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை நடந்து வருகிறது. சேலம் மத்திய மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூா் ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது.

இதில் சேலம் வடக்கு தொகுதியில் 30,500, சேலம் தெற்கு தொகுதியில் 26,000, சேலம் மேற்கு தொகுதியில் 22,000, ஓமலூா் தொகுதியில் 37,000 என மொத்தம் 1,15,500 போ் திமுக உறுப்பினா்களாக இணைந்துள்ளனா். இதில் இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் 25 ஆயிரம் போ் இணைந்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com