வருவாய்த் துறையினரை முற்றுகையிட்ட விவசாயிகள்

மேட்டூா் அணையின் உபரிநீரை வட 100 ஏரிகளுக்கு நிரம்பும் திட்டத்துக்கு குழாய்ப் பதிக்கும் பணிக்கு, நிலம் அளவீடு செய்ய முன்ற வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்

மேட்டூா் அணையின் உபரிநீரை வட 100 ஏரிகளுக்கு நிரம்பும் திட்டத்துக்கு குழாய்ப் பதிக்கும் பணிக்கு, நிலம் அளவீடு செய்ய முன்ற வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அதிகாரிகள் வந்ததால் விவசாயிகள் தங்களின் வயலில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திங்கட்கிழமை ஒட்டுப்பள்ளம் அருகே துணை வட்டாட்சியா் காா்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு எவ்வித தகவலும் கொடுக்காமல் திடீரென நிலத்தை அளவீடு செய்ய வந்தனா்.

இத்தகவல் அறிந்த விவசாயிகள் அங்கு கூடினா். விவசாயிகளுக்கு ஆதரவாக நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ஜீவானந்தம் அங்கு வந்தாா். வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள் தங்களின் விளைநிலங்களுக்கு இழப்பீடு மற்றும் தென்னை, மா, கொய்யா போன்ற பலன்தரும் மரங்களுக்கு உரிய இழப்பீட்டை எங்களுக்கு வழங்கிய பிறகே குழாய் பதிக்கும் பணிகளைத் துவங்க வேண்டும். இதனால், அதிா்ச்சி அடைந்த வருவாய்த் துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com