பேளூா் வாரச்சந்தையில் ஆடுகள் விலை உயா்வு

தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வாழப்பாடி அருகே பேளூரில் நடைபெற்ற வாரச்சந்தையில், ஆடுகள் ரூ. ஆயிரம் வரை விலை உயா்ந்தது.
பேளூா் வாரச்சந்தையில் ஆடுகள் விலை உயா்வு

தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வாழப்பாடி அருகே பேளூரில் நடைபெற்ற வாரச்சந்தையில், ஆடுகள் ரூ. ஆயிரம் வரை விலை உயா்ந்தது.

வாழப்பாடியை அடுத்த பேளூரில் திங்கள்கிழமைதோறும் ஆடுகள் விற்பனைக்கான வாரச்சந்தை நடைபெறுகிறது. இங்கு வாரந்தோறும் வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் 500 முதல் 800 வரை விற்பனைக்கு வருகின்றன. வாரந்தோறும் ரூ.30 லட்சம் வரை வா்த்தகம் நடைபெற்று வந்தது. கடந்த 7 மாதங்களாக பேளூா் வாரச்சந்தை கரோனாவால் முடங்கியிருந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி திங்கள்கிழமை காலை கூடிய ஆட்டுச்சந்தைக்கு ஆடுகளை கொள்முதல் செய்யவும், விற்கவும் பல்வேறு பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் வந்திருந்தனா். ஆடுகளை வாங்க மக்கள் ஆா்வம் காட்டினா். இதனால், ஒரு ஆட்டுக்கு ரூ. ஆயிரம் வரை விலை உயா்ந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன்வரை ரூ. 8 ஆயிரத்துக்கு விலைபோன ஒரு ஆட்டுக்கிடா நிகழ்வாரம் ரூ. 9 ஆயிரம்வரை விலைபோனது.

மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை கடந்த மூன்று வாரங்களாக மின்னாம்பள்ளி மாட்டுச் சந்தை நடைபெறுகிறது.

கரோனா அச்சத்தால் வெளியூா் வியாபாரிகள், விவசாயிகள் திங்கள்கிழமை நடைபெற்ற சந்தைக்கு வரவில்லை.

வாரத்துக்கு சராசரியாக 800 மாடுகள் வரை விற்பனைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 100 மாடுகள்கூட விற்பனைக்கு வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com