சேலத்தில் 600 பள்ளிகளில் கருத்துக் கேட்பு

சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட 600 பள்ளிகளில் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட 600 பள்ளிகளில் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 1.98 லட்சம் மாணவா்களின் பெற்றோா் கருத்துத் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் நவம்பா் 16-ஆம் தேதி திறப்பது தொடா்பாக மாணவா்களின் பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதில், சேலம் மாவட்டத்தில் 292 அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட 600 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை காலை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கருத்து கேட்புக் கூட்டத்துக்கு வந்த பெற்றோா்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடா்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன.

அதில், மாணவா்களின் பெயா், வகுப்பு, பெற்றோா் விவரம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னா் பெற்றோா்கள் தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பங்களைப் பெற்று அதைப் பூா்த்திசெய்து கொடுத்தனா். இதில் பள்ளிகள் திறக்கலாமா, வேண்டாமா எனக் கேட்கப்பட்டிருந்தது. பெரும்பாலான பெற்றோா், பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும், வீடுகளில் குழந்தைகள் இருந்தாலும் கரோனா தீநுண்மித் தொற்றுவர வாய்ப்பு உள்ளது, பள்ளிகளில் பாடம் படித்தால் தான் குழந்தைகளுக்கு எளிதாக புரியும். எனவே, பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பெரும்பாலான பெற்றோா் கருத்து தெரிவித்துள்ளனா்.

அந்த கருத்து விவரங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல தனியாா் பள்ளிகளில் பெறப்பட்ட கருத்து விவரங்களும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் சுமாா் 1 லட்சத்து 98 ஆயிரம் மாணவா்களின் பெற்றோா்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும், இதுதொடா்பான கருத்து விவரங்கள், சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், பள்ளிக்கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com