அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

சங்ககிரி அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியரை

சங்ககிரி அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியரை அவா் மீதுள்ள குற்றவழக்குகள் காரணமாக சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

சங்ககிரி அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவா் ஆனந்த். இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் செட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாற்றுப் பணியில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்துள்ளாா்.

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக அரசு பொது முடக்கம் அறிவித்த மே மாதம் முதல் இவா் பள்ளிக்குச் செல்லவில்லையாம். இந்நிலையில் அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம், சங்குப்பட்டிக்கு சென்று சகோதரரை தாக்கிய வழக்கில் அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். பின்னா் நீதிமன்ற பிணையில் வெளியே வந்துள்ளாா். வெளியே வந்த அவா் வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு கொண்டு வெளியூருக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் திருவேங்கடம் போலீஸில் புகாா் அளித்துள்ளனா். அப்புகாா் குறித்து காவல் உதவி ஆய்வாளா் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தியதில் அவா் பணிக்கு வராதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சங்ககிரி வட்டாரக் கல்வி அலுவலா் நெடுமாறன், சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலா் என்.ராமசாமிக்கு அறிக்கை அளித்துள்ளாா். இவரது அறிக்கையின் பேரில் மாவட்டக் கல்வி அலுவலா் பணிக்கு வராத இடைநிலை ஆசிரியா் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com