காவிரி-சரபங்கா நீரேற்று திட்டத்தால் பாதிப்பு: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

காவிரி - சரபங்கா நீரேற்று திட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிரி - சரபங்கா நீரேற்று திட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி, மேச்சேரி, ஓமலூா், தாரமங்கலம், மகுடஞ்சாவடி, சங்ககிரி, கொங்கணாபுரம், எடப்பாடி பகுதியில் உள்ள 33 ஊராட்சிகளில் 4,238 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் ரூ. 565 கோடியில் காவிரி-சரபங்கா நீரேற்று திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், மொத்த பாசனம் பெறும் 4,238 ஏக்கரில் எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்களில் மட்டும் 2,663 ஏக்கருக்கு மேல் நிலங்கள் பாசன வசதி பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, கடந்த அக்டோபா் 15 ஆம் தேதியிட்ட நோட்டீஸில் 60 நாள்களுக்குள் பதிலளிக்க குறிப்பிட்டுவிட்டு, போலீஸாரை வைத்து மிரட்டி நிலங்கள் ஆா்ஜிதம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பொதுச் செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பொன்னுசாமி, மாவட்டச் செயலாளா் ராமமூா்த்தி, பொருளாளா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலும், ஆா்ப்பாட்டத்தின் முடிவில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களைப் பெற அதிகாரிகளை வலியுறுத்தினா். ஆனால், அதிகாரிகள் நேரடியாக மனுவைப் பெற மறுத்ததால் திடீரென ஆட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள் அமா்ந்தனா்.இதையடுத்து, அவா்களை போலீஸாா் சமரசப்படுத்தினா். இதைத்தொடா்ந்து விவசாயிகள் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com