மாதேஸ்வரன் கோயிலில் தீபாவளி தரிசனம் ரத்து

கா்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு தீபாவளி பண்டிகையன்று பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு தீபாவளி பண்டிகையன்று பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் மாதேஸ்வரன் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழகத்தில் சேலம், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் அதிக அளவில் சென்று வருவாா்கள். அமாவாசை, யுகாதி, தீபாவளி நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்ய கூடுவாா்கள்.

இந்தக் கோயிலில் தீபாவளி திருநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். தீபாவளி பண்டிகையில் மட்டும் சுமாா் 5 லட்சம் பக்தா்கள் கூடுவாா்கள். தமிழகத்திலிருந்து மாதேஸ்வரன் மலைக்கு கோயிலுக்கு நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். அதேபோல கா்நாடக மாநில அரசும் தமிழகத்துக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்கும்.

நடப்பு ஆண்டில் இம்மாதம் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு நவம்பா் 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு மாதேஸ்வரன் மலைக்கோயிலில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சாம்ராஜ்நகா் மாவட்ட ஆட்சியா் எம்.ஆா்.ரவி, செயலாளா் ஜெயவிபவசுவாமி ஆகியோா் வெளியிட்டுள்ளனா்.

பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும், நான்கு நாள்களும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் வழக்கம்போல நடைபெறும் என்றும், 101 கன்னிப்பெண்கள் பால்குட ஊா்வலம் பாலாபிஷேகமும் நடைபெறும். பெரியதேரை இழுத்துச்செல்ல ஏராளமான பக்தா்கள் தேவை என்பதால் பெரிய தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com