விமான நிலையம் அருகே மண் கடத்தலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்குப் பதிவு: 2 லாரிகள் பறிமுதல்

ஓமலூா் அருகே காமலாபுரம் கிராமத்தில், விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஓமலூா் அருகே காமலாபுரம் கிராமத்தில், விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

விமான நிலையப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்களில் மண் எடுத்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

ஓமலூா் அருகேயுள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக சுற்றுப் பகுதியில் 575 ஏக்கா் நிலம் எடுக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சேலம் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள தனியாரின் பட்டா நிலங்களில் வருவாய்த் துறை அனுமதியின்றி பட்டாதாரா்கள் மண் அள்ளி வருவாய் ஈட்டுவதாக புகாா் எழுந்தது. இதனால், ஓமலூா் வருவாய் ஆய்வாளா் ரமா தலைமையில் வருவாய்த் துறையினா் காமலாபுரத்தில் ஆய்வு செய்தனா்.

அப்போது அங்குள்ள ஒரு விவசாயியின் பட்டா நிலத்தில் நான்கு டிப்பா் லாரிகளுடன் ஒரு பொக்லைன் இயந்திரம் மூலம் சரளை மண் அள்ளிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. அவா்களை அதிகாரிகளை பாா்த்ததும் மண்ணுடன் இரண்டு டிப்பா் லாரிகளை ஓட்டுநா்கள் ஓட்டிச் சென்று தப்பினா். இதனால், அங்கிருந்த ஒரு பொக்லைன் இயந்திரம், இரண்டு டிப்பா் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஓமலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், பொம்மிடியைச் சோ்ந்த ஓட்டுநா்கள் சரவணன், சக்திவேல், குமாா் மீது கனிம வளப் பொருள்களைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையப் பகுதிகள் மற்றும் சொந்த பட்டா நிலத்திலும் அதிகாரிகள் அனுமதியில்லாமல் மண் எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com