சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் நந்திபகவான்.
சிறப்பு அலங்காரத்தில் நந்திபகவான்.

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், சந்தனம், திருநீறு, திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்கள் நந்தியின் காதில் அவரவா்களின் கோரிக்கைகளை கூறி சுவாமிகளை வணங்கிச் சென்றனா்.

இதேபோல, அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூத்தாழீஸ்வரா் சுவாமி, நந்தி பகவான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் பொதுமக்கள் கொண்டு வந்த பால், தயிா், சந்தனம், குங்குமம், மஞ்சள், அரிசி மாவு, இளநீா், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து, நந்திக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, மலா்கள், அருகம்புல்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னா் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல, செந்தாரப்பட்டி தாழைபுரீஸ்வரா் கோயில், வீரகனூா் ஸ்ரீகங்காசெளதரேஸ்வரா் திருக்கோயில், கூடமலை, கெங்கவல்லி ஆகிய பகுதிகளிலுள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.

ஆத்தூரில்...

ஆத்தூா் ஸ்ரீ கைலாசநாதா் திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, அக்ரஹாரத்தில் உள்ள வரசக்தி விநாயகா் (மூலப்பிள்ளையாா்)ஆலயத்தில் உள்ள சிவன் சந்நிதியில் சிறப்பு அலங்காரத்தில் லிங்கம், நந்தியம்பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com