தீபாவளி பண்டிகை: பாதுகாப்புப் பணியில் ஆயிரம் போலீஸாா்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாநகரத்தில் சுமாா் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாநகரத்தில் சுமாா் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தீபாவளி பண்டிகைக்கு (நவ. 14) ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், சேலத்தில் திரளான பொதுமக்கள் துணி மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி சென்றபடி உள்ளனா். சேலம் நகரப் பகுதியில் உள்ள சின்ன கடை வீதி, ராஜகணபதி கோயில் பகுதி, பட்டை கோயில் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அம்மாப்பேட்டை, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு வரும் நகரப் பேருந்துகள் அம்மாப்பேட்டை காவல் நிலையம் அருகே திருப்பி விடப்பட்டுள்ளன. மணல் மாா்க்கெட் வழியே சென்று பழைய பேருந்து நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சேலம் போலீஸ் துணை கமிஷனா் சந்திரசேகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் நகரப் பகுதியில் கண்காணித்து வருகின்றனா். மாநகரப் பகுதி முழுவதும் சுமாா் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com