தேவூா் அருகே ரூ.3.70 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் தாா்ச் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தாா்ச் சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைக்கிறாா் சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ராஜா.

எடப்பாடி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சாா்பில் சங்ககிரி உட்கோட்டத்துக்குள்பட்ட ஆலத்தூரிலிருந்து ரெட்டிப்பாளையம் வழியாக தேவூா் செல்லும் ஒரு வழிச் சாலையை, ஆலத்தூா், ரெட்டிபாளையம் மேடு முதல் தேவூா் அம்மாபாளையம் வரை 3.20 கிலோ மீட்டா் நீளத்துக்கு ரூ. 3.70 கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி தடுப்புச்சுவா் அமைக்கும் பணிக்கு சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ராஜா தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா்.

இதில், தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் கே.வெங்கடாஜலம், நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் நடராஜன், உதவி கோட்ட பொறியாளா் மலா்விழி, உதவிப் பொறியாளா் கவிதா, சங்ககிரி மேற்கு அதிமுக ஒன்றியச் செயலா் சுந்தரராஜன், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com