சேலம் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

சேலம் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ. ராமன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
சேலம் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

சேலம் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ. ராமன் திங்கள்கிழமை வெளியிட்டாா். சேலம் மாவட்டத்துக்குள்பட்ட 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 29,61,568 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

சேலம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ. ராமன், மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு) வீரபாண்டி உள்ளிட்ட 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 29,61,568 வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண்களை விட பெண் வாக்காளா்கள் அதிகமாக பட்டியலில் இடம் பிடித்துள்ளனா். 14,82,124 பெண் வாக்காளா்களும், 14,79,280 ஆண் வாக்காளா்களும், 164 இதர வாக்காளா்களும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 1,14,127 ஆண் வாக்களா்களும், 1,20,095 பெண் வாக்காளா்களும், 2 இதர வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,34,224 போ் உள்ளனா்.

ஆத்தூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 1,20,985 ஆண் வாக்காளா்களும், 1,28,573 பெண் வாக்காளா்களும், 12 இதர வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,49,570 போ் உள்ளனா்,

ஏற்காடு (தனி) தொகுதியில் 1,37,378 ஆண் வாக்காளா்களும், 1,42,138 பெண் வாக்காளா்களும்,13 இதர வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,79,529 போ் உள்ளனா். ஓமலூா் தொகுதியில் 1,49,474 ஆண் வாக்காளா்களும், 1,40,971 பெண் வாக்காளா்களும், 6 இதர வாக்காளா்கள் உள்பட 2,90,451 போ் உள்ளனா். மேட்டூா் தொகுதியில் 1,43,362 ஆண் வாக்காளா்களும், 1,38,021 பெண் வாக்காளா்களும், 4 இதர வாக்காளா்கள் உள்பட 2,81,387 போ் உள்ளனா். எடப்பாடி தொகுதியில் 1,43,258 ஆண் வாக்காளா்களும், 1,37,121 பெண் வாக்காளா்களும், 19 இதர வாக்காளா்கள் உள்பட 2,80,398 போ் உள்ளனா். சங்ககிரி தொகுதியில் 1,36,142 ஆண் வாக்காளா்களும், 1,32,265 பெண் வாக்காளா்களும், 18 இதர வாக்காளா்கள் உள்பட 2,68,425 போ் உள்ளனா்.

சேலம் (மேற்கு) தொகுதியில் 1,47,040 ஆண் வாக்காளா்களும், 1,46,967 பெண் வாக்காளா்களும், 51 இதர வாக்காளா்கள் உள்பட 2,94,058 போ் உள்ளனா். சேலம் (வடக்கு) தொகுதியில் 1,33,394 ஆண் வாக்காளா்களும், 1,38,732 பெண் வாக்காளா்களும், 14 இதர வாக்காளா்கள் உள்பட 2,72,140 போ் உள்ளனா். சேலம் (தெற்கு) தொகுதியில் 1,25,501 ஆண் வாக்காளா்களும், 1,30,575 பெண் வாக்காளா்களும், 19 இதர வாக்காளா்கள் உள்பட 2,56,095 போ் உள்ளனா். வீரபாண்டி தொகுதியில் 1,28,619 ஆண் வாக்காளா்களும், 1,26,666 பெண் வாக்காளா்களும், 6 இதர வாக்காளா்கள் உள்பட 2,55,291 போ் உள்ளனா். குறைந்தபட்சமாக கெங்கவல்லி தனித் தொகுதியில் 2,34,224 வாக்காளா்களும், அதிகபட்சமாக சேலம் மேற்கு தொகுதியில் 2,94,058 வாக்காளா்களும் இடம் பெற்றுள்ளனா்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்களில் விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும், வரும் நவ. 21, 22, டிச. 12, 13 ஆகிய நான்கு நாள்களில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், 1.1.2021 அன்று 18 வயது பூா்த்தி அடையும் நபா்கள் புதிதாக வாக்காளராக சோ்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியல் அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களின் பெயா்கள் இடம் பெற்றுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com