ஏரியில் நீா் நிரப்புவது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம்

ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் ஊராட்சியில் உள்ள ஏரியில் நீா் நிரப்புவது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் மு.துரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
at17rdo_1711chn_162_8
at17rdo_1711chn_162_8

ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் ஊராட்சியில் உள்ள ஏரியில் நீா் நிரப்புவது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் மு.துரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பருவமழை பெய்து வரும் நிலையில் ஆத்தூா் ஆணைவாரியில் இருந்து வரும் நீரால் முட்டல் ஏரி நிரம்பி நீா் வெளியாகி வருகிறது. இந்த நீரை கல்லாநத்தம் ஊராட்சி, அம்மம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள சுமாா் 2000 ஏக்கா் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்த வேண்டும் என பலா் கோரிக்கை வைத்து வந்தனா்.

முட்டல் ஏரியில் இருந்து வெளியேறும் நீா் இந்தப் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு பயன்படாமல் மற்ற ஏரிகளுக்கு செல்கிறது என புகாா் தெரிவித்து வந்தனா். இந்த நிலையில் ஆயக்கட்டு தலைவா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், வட்டாட்சியா், பொதுப்பணித் துறை அலுவலா்கள் கலந்து கொண்ட கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைவரின் கோரிக்கைகளை கேட்டறிந்த கோட்டாட்சியா், அலுவலா்களுடன் ஆலோசித்து, மாவட்ட ஆட்சியரின் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

இக் கூட்டத்தில் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன், கல்லாநத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் சூடாமணி வெங்கடேசன், வழக்குரைஞா் தயாளன்,கே.பி.ஜே.பெரியசாமி உள்ளிட்ட ஆயக்கட்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com