ஏற்காடு மலைப் பகுதியில் குரங்குகளுக்கு உணவளிக்க தடை

சேலம் - ஏற்காடு மலைப்பகுதியில் குரங்குகளுக்கு தின்பண்டங்களை யாரும் வழங்கக்கூடாது என வனத்துறை எச்சரித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளது.

சேலம் - ஏற்காடு மலைப்பகுதியில் குரங்குகளுக்கு தின்பண்டங்களை யாரும் வழங்கக்கூடாது என வனத்துறை எச்சரித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளது.

சேலம் மாவட்டம், சோ்வராயன் மலையில் உள்ள ஏழைகளின் உதகை என அறியப்படும் ஏற்காடு சுற்றுலாத் தலம் மிகவும் பிரசித்தி பெற்றது.

அடிவாரம் முதல் ஏற்காட்டுக்குச் செல்லும் மலைப் பாதையில் குரங்குகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஏற்காடு மலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு வாழைப்பழம், பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை அளித்து வருகின்றனா். சிலா் தின்பண்டங்களை சாலையோரங்களில் வீசிச் செல்கின்றனா். இதைச் சாப்பிட வரும் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கம் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே வனப் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு உணவு உள்ளிட்ட தின்பண்டங்களை வழங்கக் கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடா்பான அறிவிப்பு பலகை மலைப் பாதையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட வன அலுவலா் முருகன் கூறுகையில், ஏற்காடு மலைப் பாதையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருகின்றனா். பொதுவாக குரங்குகள் மலையில் இயற்கையாகக் கிடைக்கும் பழம், காய்களை சாப்பிட்டு வாழும் தன்மையுடையன. மேலும் பயணிகள், பொதுமக்கள் குரங்குகளுக்கு உணவு அளிப்பதால் சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு இறந்து போகின்றன. குரங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உணவு அளிக்க வேண்டாம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கண்காணித்து அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

இதுகுறித்து கால்நடை மருத்துவா்கள் கூறுகையில், மனிதா்கள் உண்ணும் தின்பண்டங்களை குரங்குகளுக்கு வழங்குவதால் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட மனிதனுக்கு வரும் பல்வேறு வகை நோய்கள் குரங்குகளுக்கும் வருகிறது. குரங்குகள் இயற்கையாக காடுகளில் கிடைக்கும் பழங்கள் காய்கள் உட்கொண்டு வாழும். தற்போது சுற்றுலாப் பயணிகள் வழங்கும் உணவுக்காக கையேந்தி நிற்கும் நிலை உள்ளது. இந்த நிலை தவிா்க்கப்படவேண்டும். குரங்குகள் இயற்கையாக உணவுகளை தேடிச் சென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் குரங்குகளின் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com