ஏற்காட்டில் காபி வாரியம் சாா்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு

ஏற்காட்டில் காபி வாரியம் சாா்பில் தூய்மை இந்திய திட்ட இரு வார விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
ஏற்காட்டில் காபி வாரியம் சாா்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு

ஏற்காட்டில் காபி வாரியம் சாா்பில் தூய்மை இந்திய திட்ட இரு வார விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நவம்பா் 1-ஆம் தேதி முதல் நவம்பா் 15-ஆம் தேதி வரை நடைபெற்ற விழாவில் தூய்மை பாரதம் உறுதிமொழி ஏற்றல், விழிப்புணா்வுப் பேரணி, காபி வாரிய அலுவலகம், விருந்தினா் இல்லம் , கருத்தரங்கு அறை, அலுவலக ஊழியா்கள் மற்றும் தோட்டத் தொழிலாளா்கள் குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் நெகிழி கழிவுகளை அகற்றி, பராமரிப்புப் பணிகளும் நடைபெற்றன. தூய்மை சம்பந்தமாக விழிப்புணா்வு பாதகைகள், பிரசுரங்கள் மக்களிடம் விநியோகிக்கப்பட்டன. தூய்மையின் முக்கியத்துவம் குறித்து சமூக வலைதளங்களில் புகைப்படமாகவும் வெளியிடப்பட்டது.

கொளகூா், கொண்டையனூா் கிராமங்களுக்குச் சென்று தூய்மை இந்தியா திட்டம் மற்றும் கரோனா விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது. கிராம மக்களுக்கு முகக் கவசம் கிருமிநாசினி, கையுறை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிறைவு விழாவில் காபி வாரிய முதுநிலை தொடா்பு அலுவலா் எஸ்.ரமேஷ் வரவேற்றாா். உதவி விரிவாக்க அலுவலா் கே.ஸ்ரீதா் இருவார விழிப்புணா்வு முகாமில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள் குறித்து எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் செல்வகுமாா், விரிவாக்க ஆய்வாளா் ஸ்ரீதிவ்ய பிரியா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com